பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.03.2023, வெள்ளி
03.03.2023, வெள்ளி
திருக்குறள்
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
பொருள்
மனம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவதே சிறந்ததாகும்.
பழமொழி
Truth alone triumphs
வாய்மையே வெல்லும்.
பொன்மொழி
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். - லெனின்
பொதுஅறிவு
தென்னிந்தாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?
கோயம்புத்தூர்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* இந்திய விமானப்படைக்கு ரூபாய் 6,828 கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
* சென்னையில் பரவி வருகிறது இன்ப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று என்று பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
* சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் சென்னை -பெங்களூர் இடையே சாலையை அமைக்க மத்திய சாலைபோக்குவரத்துறை திட்டமிட்டுள்ளது.
* காலை உணவுத் திட்டம் அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5000 ரன்களை எடுத்து இந்திய வீரர் ஜடேஜா புதிய சாதனை படைத்தார்.
Today's Headlines
* The Union Cabinet approved the purchase of 70 training
aircraft for the Indian Air Force at a cost of Rs 6,828 crore.
* The public health department has informed that there is an influenza-A virus infection spreading in Chennai.
* The Central Road Transport Department is planning to build a road between Chennai and Bangalore to run on solar electricity.
* The Chief Minister has announced that the breakfast program will be extended to all primary schools.
* Indian cricketer Jadeja set a new record by taking 500 wickets and 5000 runs in
international cricket.
கருத்துகள்
கருத்துரையிடுக