பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.03.2023, புதன்
08.03.2023, புதன்
இன்று மார்ச் 8 மகளிர் தினம். அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
திருக்குறள்
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கொலொடு நின்றான் இரவு.
பொருள்
ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், வழியில் வேல் ஏந்தி கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
பழமொழி
Penny wise and pound foolish
கடுகு போன இடம் ஆராய்வார். பூசணிக்காய் போன இடம் தெரியாது.
பொன்மொழி
மிகையாக வளைத்தால் வில் முறிந்துவிடும்.
வளையாமல் இருந்தால் மனம் முறிந்துவிடும்.
- பிரான்சிஸ் பேக்கன்.
பொதுஅறிவு
இந்தியாவின் முதல் கடல்பாலம் எது?
பாம்பன் பாலம்
இன்றைய முக்கியச் செய்திகள்
* நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறை பதவியேற்றார் நெய்பியு ரியோ.
* இந்தியாவின் வரிச்சுமை குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
* காய்ச்சல் முகாம்களில் 5,000 மருத்துவப் பணியாளர்களை ஏற்பாடு செய்துள்ள தமிழக சுகாதாரத்துறை.
* மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்களுக்கு இன்று அரசு விடுமுறை.
* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி.
Today's Headlines
* Naibiu Rio was sworn in as the Chief Minister of Nagaland
for the fifth term.
* Prime Minister said that India's tax burden has reduced.
* Tamil Nadu Health Department has arranged 5,000 medical personnel in fever camps.
* Today is a government holiday for women in Telangana on the occasion of Women's Day.
* women's premier league cricket Delhi team won.
கருத்துகள்
கருத்துரையிடுக