பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.03.2023, வியாழன்
09.03.2023, வியாழன்
திருக்குறள்
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
பொருள்
ஒரு செயலால் மற்றொரு செயலை முடித்துக் கொள்ள வேண்டும். அச்செயல் ஒரு யானையால் மற்றொரு யானையைக் கட்டியது போன்றதாகும்.
பழமொழி
A hasty man never wants woe
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு.
பொன்மொழி
பயம் அதன் மாயத்தை உருவாக்குகிறது. அது பயத்தைவிட மிகவும் பயமாக உள்ளது. - ஜவஹர்லால் நேரு.
பொதுஅறிவு
உலகின் மிகச்சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவராக பெண்களுக்கு 50 நாட்கள் கூடுதலாக வேலை தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டில் அரசு மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர நுழைவுத் தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
* ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர வாய்ப்புள்ளது.
* விண்வெளியில் செயலிழந்த செயற்கைக் கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி வெற்றி.
Today's Headlines
* The Chief Minister has announced that 50 days of additional
work will be given to women as heads of households under the Rural Employment
Guarantee Scheme.
* Department of School Education has informed that there is no entrance exam for students to join government model schools in Tamil Nadu.
* Rice prices in Tamil Nadu are likely to rise by Rs 10 per kg due to reduced supply from Andhra Pradesh.
* ISRO has succeeded in recovering a malfunctioning satellite in space.
கருத்துகள்
கருத்துரையிடுக