பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.03.2023, செவ்வாய்
14.03.2023, செவ்வாய்
திருக்குறள்
உள்ளத்தாள் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
பழமொழி
Do in Rome as Romans do.
ஊருடன் கூடி வாழ்.
பொன்மொழி
முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே, எதிலும் நிபுணர் ஆவதற்கு பின்பற்ற வேண்டிய விதி.
பொதுஅறிவு
உலக பை (ℼ) தினம் கொண்டாடப்படும் நாள் எது?
மார்ச் 14
இன்றைய முக்கியச் செய்திகள்
யானைகளைப் பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்னும் ஆவணக் குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
மகளிர் மேம்பாட்டுக் கழக ஆய்வு அடிப்படையில் முதற்கட்டமாக ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகைக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது.
தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவையில்லை என சுகாராரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
Today's Headlines
* The Elephant Whisperers, a documentary film about a
Mudumalai couple who look after elephants, has won an Oscar.
* An announcement of Rs 1,000 entitlement for poor women in the first phase based on the Women's Development Corporation study will be released in the budget.
* The Minister of Health has said that there is no need for a vaccine for the viral fever that is currently spreading.
* The Union Minister has said that a museum will soon be set
up in Adichanallur.
* The fourth and final Test between India and Australia ended in a draw.
கருத்துகள்
கருத்துரையிடுக