பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.03.2023, வியாழன்
16.03.2023, வியாழன்
திருக்குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொருள்
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
பழமொழி
Gain savors sweetly from anything.
நாய் விற்ற காசு குரைக்காது.
பொன்மொழி
நேரம் விலைமதிப்பற்றது. ஆனால் உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது.
பொதுஅறிவு
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் யார்?
சுரேகா யாதவ்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் பாண்டிச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 11 நாட்களுக்கு விடுமுறை.
* புதிய வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
* கோவை சாடிவயல் பகுதியில் ரூபாய் 8 கோடி செலவில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
* பொதுத்தேர்வு நேரங்களில் கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
* சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடியில் 6 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்.
* மகளிர் லீக் கிரிக்கெட் போட்டியில் உத்திரப்பிரதேச அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி.
Today's Headlines
* 11 day holiday for 1 to 8 class students in
Pondicherry due to increase in new viral fever cases.
* The Tamil Nadu government has issued guidelines due to the increasing spread of the new type of virus.
* The Chief Minister has said that a new elephant camp will be set up in Sadivayal area of Coimbatore at a cost of Rs 8 crore.
* The High-court has directed that the use of loudspeakers in
temple festivals during public examinations should be avoided.
* Bangalore team beat Uttar Pradesh team in women's league cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக