பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.03.2023, வெள்ளி

17.03.2023, வெள்ளி

திருக்குறள்

நட்பிற்கு  வீற்றிருக்கை  யாதெனின்  கொட்புன்றி

ஒல்லும்வாய்  ஊன்றும்  நிலை

பொருள்

நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

பழமொழி

He who lives by the sword, dies by the sword

வாளால் வாழ்பவன் வாளாலே வீழ்வான்

பொன்மொழி

முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல. நீ நினைத்ததை முடிக்கும் வரை.

பொதுஅறிவு

2022 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர் யார்?

எழுத்தாளர் சிவசங்கரி

இன்றைய முக்கியச் செய்திகள்

* பயத்தைப் போக்கி மாணவர்களை தேர்வு எழுத அனுப்பி வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்.

* வருகிற ஜீன் 14 ஆம் தேதி வரை ஆதார் தகவல்கள் ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பிக்கலாம்.

* அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேசிய  நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.

* ஜி - 20 மாநாட்டின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

Today's Headlines

* Education Minister appeals to parents to get rid of fear and send students to write exams.

* Aadhaar details can be updated online for free till 14th June.

* School Education Department Instructions for Government School Plus 2 Students to Apply for National Entrance Test.

* The second meeting of the G-20 summit will be held in Chennai.

* The first one-day cricket match between India and Australia will be held today at the Wankhede Stadium in Mumbai.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்