பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.03.2023, திங்கள்
20.03.2023, திங்கள்
திருக்குறள்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்.
பொருள்
உதவி செய்யும் நல்ல குணமுடையவனிடம் உள்ள செல்வம் பழமரம் ஊரின் நடுவில் பழுத்தது போன்றதாகும்.
பழமொழி
The tongue of the idle person is never still
சோம்பேறியின் நாக்கு சும்மா இருக்காது.
பொன்மொழி
உழைப்பில் எறும்பாய் இரு.
உறுதியில் இரும்பாய் இரு.
வெற்றி கரும்பாய் வரும்.
பொதுஅறிவு
ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.
இன்றைய முக்கியச் செய்திகள்
தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை துணைத்தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.
128 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரானோ பாதிப்பு ஒரே நாளில் 1,071 ஆக உயர்வு.
திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. 15 போட்டித் தேர்வுகள் புதிதாக சேர்ப்பு.
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
Today's Headlines
The Tamil Nadu financial report is being tabled in the
Legislative Assembly today.
The Minister of School Education informed that steps will be taken to make the students who did not write the general examination to write the supplementary examination.
1,071 Corona new cases in India in one day, highest in 128 days
TNPSC has released the revised exam schedule. New addition of 15 competitive exams.
Tamil Nadu is likely to receive moderate rain for 5 days, according to the Meteorological Department.
Australia won the 2nd ODI cricket between India and Australia.
கருத்துகள்
கருத்துரையிடுக