பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.03.2023, வெள்ளி
24.03.2023, வெள்ளி
திருக்குறள்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை
பொருள்
முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.
பழமொழி
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
பொன்மொழி
உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.
பொதுஅறிவு
இந்தியாவில் முதன்முதலில் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாவட்டம் எது?
விதிஷா
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழக சட்ட சபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது.
* நாட்டில் கொரோனோ மரபணு திரிபு சோதனைகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்தல்.
* இந்தியாவில் புதிய வகை கொரொனாவால் 349 பேர் பாதிப்பு.
* உலக நாடுகளுக்குச் சமமாக தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி தேவை என முதல்வர் பேச்சு
* உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மேலும் இரண்டு பதக்கங்களை வென்றது இந்தியா.
Today's Headlines
* Online Gambling Prohibition Bill Passed in Tamil Nadu
Legislative Assembly
* Prime Minister instructs to increase Corona genetic strain tests in the country.
* 349 people affected by new type of corona in India.
* Chief Minister's speech that there is a need for technological development in Tamil Nadu at par with the rest of the world
* India won two more medals in World Cup Shooting.
கருத்துகள்
கருத்துரையிடுக