பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 29.03.2023, புதன்

29.03.2023, புதன்

திருக்குறள்

உழுவார்  உலகத்தார்க்கு  ஆணிஅஃது  ஆற்றாது

எழுவாரை  எல்லாம்  பொறுத்து

பொருள்

உழவுத்தொழிலே மற்ற தொழில் செய்வார்க்கும் உணவினை வழங்குகின்றது. எனவே உழவுத்தொழில் செய்பவர் உலகத்தோருக்கு அச்சாணி போன்றவர்.

பழமொழி

After a storm there is calm.

புயலுக்குப் பின் அமைதி.

பொன்மொழி

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார். அதை நீ வென்றுவிடலாம். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

உலகிலேயே மிக உயரமான மலை எது?

இமயமலை.

இன்றைய முக்கியச் செய்திகள்

* பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் ஜீன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு.

* ரூபாய் 2,753 கோடி செலவில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்.

* பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 31 வரை நீட்டித்து உத்திரப்பட்டுள்ளது.

* அனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனை விவரங்களை ஐ.சி.எம்.ஆர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தல்.

* ஐரோப்பிய கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, போர்ச்சுகள் அணிகள் வெற்றி.

Today's Headlines

* The deadline for linking Aadhaar number with PAN card has been extended till 30th June.

* Higher Education Minister informed that 54 government polytechnic colleges will be upgraded at a cost of Rs 2,753 crore.

* Class 10th science practical exam has been extended till March 31.

* The central government insists that all the laboratories should upload the corona test details on the ICMR website.

* England, Portugal win in European football qualifying match.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்