பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.03.2023, வியாழன்

30.03.2023, வியாழன்

திருக்குறள்

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும்

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்

பொருள்

நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.

பழமொழி

Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொன்மொழி

உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?

கோபர் நிக்கஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்.

* ஐஐடி, எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்க்கை பெறும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

* தமிழகத்தில் 1 லட்சத்தைத் தாண்டியது பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை.

* ஜனநாயத்தின் தாய் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்.

* உதகை கண்காட்சி மே 6 இல் தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* அரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50 சதவீத கட்டண சலுகை என அமைச்சர் தகவல்.

* தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் இரண்டாவது முறையாக தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் சாம்பியன்.

Today's Headlines

* Minister informed that steps will be taken to sell Qatari products in all fair price shops.

* Minister announced that Rs 50,000 per annum will be given to children of construction workers who get admission in IIT, MBBS courses.

* The number of battery vehicles in Tamil Nadu has crossed 1 lakh.

* Prime Minister Modi is proud that India is the mother of democracy.

* Utagai Fair starts on 6th May and runs till 28th.

* The minister informed that if you travel more than 5 times in a month in government express buses, there is a 50 percent fare concession.

* National Table tennis championship series Tamil Nadu Sathyan Gnanasekaran got champion for the second time.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்