பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.03.2023, வெள்ளி
31.03.2023, வெள்ளி
திருக்குறள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குஅற்ற காட்சி யவர்.
பொருள்
தெளிவான அறிவினை உடையவர்கள் துன்பம் அடைந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.
பழமொழி
Blessed are the meek; For they shall inherit the earth
பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொன்மொழி
நிதானம் என்னும் அற்புதமான ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள் எதையும் சாதிப்பார்கள்.
பொதுஅறிவு
இந்திய ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர் யார்?
டாக்டர் மன்மோகன் சிங்
இன்றைய முக்கியச்செய்திகள்
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.
சென்னை - கோவை இடையே வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக அமைச்சல் தகவல்.
10 அணிகள் பங்கேற்கும் 16 வது ஐ.பி. எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* The Legislative Assembly is debating the grant request for the school education department today.
* The Prime Minister will inaugurate the Vande-bharat train service between Chennai and Coimbatore on April 8.
* Ministry informs that 18 hours three-phase electricity is provided to farmers across Tamil Nadu.
* 16th IPL with 10 teams participating Cricket matches start today.
* Indian player PV Sindhu advances to the quarterfinals of the
Spanish Masters Badminton tournament.
கருத்துகள்
கருத்துரையிடுக