பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.04.2023, திங்கள்
03.04.2023, திங்கள்
திருக்குறள்
கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
பொருள்
சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் கற்றவரின் கல்வி பெருமையடையும்.
பழமொழி
Constant dripping wears away the stone
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
பொன்மொழி
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக்கொள். - அப்துல்கலாம்.
பொதுஅறிவு
வெள்ளைப் பூண்டில் உள்ள அமிலம் எது?
பாலிக்
இன்றைய முக்கியச் செய்திகள்
* கொரானா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை.
* நெல்லை, தென்காசி மாவட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
* ரூபாய் 4,400 கோடி செலவில் சென்னையில் கடல்நீரை குடிநீராக அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்.
* மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்தது இஸ்ரோ.
* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிட்டனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பி.வி சிந்து.
Today's Headlines
* The World Health Organization advises that extra booster doses should be given to those affected by the Corona virus.
* Shocking information in the study that Anganwadi children of Nellai, Tenkasi district are severely malnourished.
* An agreement for a project to make sea water into drinking water in Chennai at a cost of Rs 4,400 crore.
* ISRO Successfully Tests Reusable Rockets.
* PV Sindhu finished second in Spain Masters Badminton.
கருத்துகள்
கருத்துரையிடுக