பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.04.2023, புதன்
05.04.2023, புதன்
திருக்குறள்
நயன்சாரா நன்மையின் நீக்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து
பொருள்
பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் எந்த நன்மையும் வராது. மாறாக உள்ள சிறப்பும் போய்விடும்.
பழமொழி
Help you to salt, help you to sorrow.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
பொன்மொழி
இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்குச் சமம். - பில்கேட்ஸ்
பொதுஅறிவு
வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படும் தாவரம் எது?
பருத்தி
இன்றைய முக்கியச் செய்திகள்
* 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10 ஆம் தேதி தொடக்கம்.
* 150 அடி அகலம் கொண்ட விண்கலம் நாளை பூமியை நெருங்குவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடக்கம்.
* நோட்டோ அமைப்பில் 31 - வது உறுப்பு நாடாக இணைந்தது பின்லாந்து.
* பூடான் மன்னர் வாங்சுக் 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
* ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி.
Today's Headlines
* 12th class answer sheet correction will start on 10th.
* The 150-foot-wide spacecraft will approach Earth tomorrow, NASA said.
* Examinations for class 6 to 9 students will start from 11th April.
* Finland became the 31st member country to join the NOTO system.
* King Wangchuck of Bhutan has arrived in India on a 2-day tour.
* Gujarat beat Delhi in IPL T20 cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக