பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.04.2023, வியாழன்
06.04.2023, வியாழன்
திருக்குறள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
பொருள்
ஊழால் ஒரு செயல் முடியாமல் போய்விட்டாலும், உடலை வருத்தும் முயற்சி அதற்கேற்ற கூலியைக் கொடுக்கும்.
பழமொழி
Where there is a will there is a way.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
பொன்மொழி
வெற்றிக்குத் தான் எல்லை உண்டு.முயற்சிக்கு எல்லை இல்லை. முயற்சித்துக் கொண்டே இரு. வெற்றியை நீ தேட வேண்டாம். வெற்றி உன்னை தேடி வரும். - அப்துல்காலம்.
பொதுஅறிவு
உலகிலேயே மிகப் பெரிய மீன் எது?
உளுவை
இன்றைய முக்கியச் செய்திகள்
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20 ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேர் தேர்வினை எழுதுகின்றனர்.
• 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரித்தேர்வுகள் நடைபெறுகின்றன.
* இரண்டு நாள் பயணமாக 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் பிரதமர். சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.
* பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித்தேர்வு மூலம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
* ஐ.பி.எல் டி-20 போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி.
Today's Headlines
* The SSLC General examination will start from today till 20th. A total of 9 lakh 22 thousand 725 people are writing the exam.
• Mock exams for class 6 to 9 students will be held from today.
* The Prime Minister is coming to Tamil Nadu on a two-day visit on the 8th. Chennai - Coimbatore Vande Bharat train starts.
* The Chief Minister has
announced that stipend will be given monthly to the students of class 10
through aptitude test.
* Punjab beat Rajasthan in IPL T20 match.
கருத்துகள்
கருத்துரையிடுக