பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.04.2023, திங்கள்
10.04.2023, திங்கள்
திருக்குறள்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
பொருள்
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பழமொழி
Enough is as good as feast.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பொன்மொழி
அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும். - அப்துல்கலாம்.
பொதுஅறிவு
இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் எது?
மும்பையில் உள்ள வாஷி நீதிமன்றம்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் முறையில் தேர்வு மதிப்பீடு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
* சி.ஆர்.பி.எப் தேர்வை தமிழிலும் நடத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
* முதுமலை பாகன் தம்பதியை பிரதமர் நேரில் சந்தித்து வாழ்த்து பாராட்டினார்.
* ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரியான்ஷீ சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's Headlines
* The Department of School Education has announced that the
evaluation will be conducted online and offline for the students of class 1 to
3.
* The Prime Minister personally met and congratulated the Mudumalai Bagan couple.
* Indian player Priyanshi won the Orleans Masters
International Badminton title
கருத்துகள்
கருத்துரையிடுக