பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.04.2023, புதன்
12.04.2023, புதன்
திருக்குறள்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்
பொருள்
இச்செயலை, காரணத்தினால், இவன் செய்து முடிக்க வல்லவன் என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடமே விட்டு விடுதல் வேண்டும்.
பழமொழி
ALL THAT GLITTERS IS NOT GOLD.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
பொன்மொழி
பொறாமை, கோபம், பகை ஆகிய மூன்றையும் நீ வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே மீண்டும் வந்து சேரும். - விவேகானந்தர்.
பொதுஅறிவு
உலகக் கண்டங்களில் மிகச் சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
இன்றைய முக்கியச் செய்திகள்
* நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 ஆம் தேதி வரை கால அவகாசம்.
* முப்படைகளில் ஆள் தேர்வுக்கான அக்னி பாதை திட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
* தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் புதிய மைதானங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
* ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி.
TODAY'S HEADLINES
* Last date to apply for NEET is 13th April.
* Agni patha scheme will go ahead for recruitment in Three-forces Supreme court judgement.
* Minister announced that new stadiums will be constructed in all constituencies in Tamil Nadu.
* Mumbai team beat Delhi team in IPL cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக