பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.04.2023, வியாழன்
13.04.2023, வியாழன்
திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள்
பொருள் இல்லாதவரை எல்லோரும் இகழ்ந்து பேசுவர். பொருளுடையவரை எல்லாரும் போற்றுவார்கள்.
பழமொழி
A PENNY SAVED IS A PENNY GAINED
சிறுதுளி பெரு வெள்ளம்
பொன்மொழி
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார். அதை நீ வென்று விடலாம். - அப்துல்கலாம்.
பொதுஅறிவு
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான்
இன்றைய முக்கியச் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு இறுதிப் பருவத் தேர்வுக்கான வழிமுறைகளை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
ஜீன் மாதம் வரை வெப்பம் தணியாது. தமிழகத்தில் அனல் காற்று வீசும். சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல 150 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வித் துறை தகவல்.
ஐ சி சி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
TODAY'S HEADLINES
The Department of Elementary Education has released the guidelines for final term exams for class 4 and 5 students in government schools.
The heat does not subside until the month of June. Hot winds will blow in Tamil Nadu. Chennai Meteorological Department Notification.
150 government school students selected to go on educational tours abroad - School Education Department information.
Suryakumar Yadav continues to be at the top of the ICC T20
Cricket Rankings.
கருத்துகள்
கருத்துரையிடுக