பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.04.2023, திங்கள்
17.04.2023, திங்கள்
திருக்குறள்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
பொருள்
முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்வது பேடி கையிலுள்ள வாள் போல எந்தப் பயனுமில்லாமல் போகும்.
பழமொழி
Failure is the stepping stone for success
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
பொன்மொழி
அலைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நீ நீந்தக் கற்றுக்கொள்ளலாம்.
பொதுஅறிவு
உலகில் அதிக அளவில் யாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது?
லெனின்
இன்றைய முக்கியச் செய்திகள்
பள்ளிக் கல்வித்துறையுடன் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை இணைக்கும் பணி தீவரம்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை.
கிராம வீடுகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு தந்ததற்காக காஞ்சிபுரம் கலெக்டருக்கு பிரதமர் விருது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் வெற்றி
TODAY'S HEADLINES
The work of connecting Adi Dravidian welfare schools with the school education department is intensive.
Admission of students in government schools in Tamil Nadu from today.
Prime Minister's Award to Kanchipuram Collector for providing 100 percent drinking water connection to village houses.
Mumbai, Rajasthan win in IPL cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக