பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.04.2023, புதன்

 19.04.2023, புதன்

திருக்குறள்

கற்றாருள்  கற்றார்  எனப்படுவர்  கற்றார்முன்

கற்ற  செலச்சொல்லு  வார்

பொருள்

கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனம் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லக் கூடியவர், கற்றவர்களில் நன்றாகக் கற்றவர் என்று புகழப்படுவர்.

பழமொழி

MAN PROPOSES, GOD DISPOSES

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

பொன்மொழி

புத்தகத்தை சேமித்து வைப்பதில் பயனில்லை. புத்தகத்தில் உள்ளதை மூளையில் சேமிக்க வேண்டும்.

பொதுஅறிவு

தபால் தலையில் இடம்பெற்ற முதல் இந்தியவர் யார்?

மகாத்மா காந்தி

இன்றைய முக்கியச் செய்திகள்

* தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

* எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம்.

* கண் மருத்துவத்துக்காக ரூபாய் ஒன்றரை கோடி செலவில் நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

* கடும் வெப்பக் காற்றலை வீசும் என ஒன்பது மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

* மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்குப் போட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

TODAY'S HEADLINES

* Apply for free admission in private schools from today.

* The exams conducted by SSC can now be written in 13 languages ​​including Tamil.

* The Chief Minister launched mobile vehicles for eye care at a cost of one and a half crore rupees.

* Orange alert has been issued for nine states as severe heat wave will blow

* The international surfing competition will start on 14th August at Mamallapuram.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்