பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.06.2023, செவ்வாய்
13.06.2023, செவ்வாய்
திருக்குறள்
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
பொருள்
கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனம் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லக் கூடியவர், கற்றவர்களில் நன்றாகக் கற்றவர் என்று புகழப்படுவர்.
பழமொழி
MAN PROPOSES, GOD DISPOSES
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
பொன்மொழி
புத்தகத்தை சேமித்து வைப்பதில் பயனில்லை. புத்தகத்தில் உள்ளதை மூளையில் சேமிக்க வேண்டும்.
பொதுஅறிவு
தபால் தலையில் இடம்பெற்ற முதல் இந்தியர் யார்?
மகாத்மா காந்தி
இன்றைய முக்கியச் செய்திகள்
* டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
* ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களின் மதிப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
* பள்ளி மாணவ மாணவிகள் சீருடைகளில் வந்தாலே பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கல்வி அமைச்சர் தகவல்.
* தேசிய அளவில் இடைநிலைக் கல்வி மாணவர்கள் இடைநிற்றல் விகித சராசரி 12.6% உள்ளது.
* குஜராத் அருகே நாளை மறுநாள் கரையைக் கடக்கிறது பெப்பர்-ஜாய் புயல். முன்னேற்பாடாக 7500 பேர் வெளியேற்றம்.
* 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
TODAY'S HEADLINES
* Chief Minister released water from Mettur dam for
irrigation of delta district.
* Government of Tamil Nadu has increased the salary of sanitation guards working in rural areas.
* Education Minister informs that school students can travel in buses for free if they come in uniform.
* Nationally, the average dropout rate for secondary education students is 12.6%.
* Cyclone Pepper-Joy makes landfall near Gujarat the day after tomorrow. Evacuation of 7500 people as progress.
* Uruguay won the U-20 World Cup final and became champions.
கருத்துகள்
கருத்துரையிடுக