பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.06.2023, புதன்
14.06.2023, புதன்
திருக்குறள்
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது
பொருள்
நம்மிடம் பாசத்தால் மிகுந்த அன்புடையவர் போலக் காட்டினாலும் தீக்குணமுடையவர் நட்பு வளர்வதை விடக் குறைதல் இனிமையைத் தரும்.
பழமொழி
JACK OF ALL TRADE IS MASTER OF NONE
பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்.
பொன்மொழி
முடியும் வரை முயற்சி செய்.
உன்னால் முடியும் வரை அல்ல.
நீ நினைத்தது முடியும் வரை.
பொதுஅறிவு
மிக நீளமான கடற்கரையைக் கொண்ட இந்திய மாநிலம் எது?
குஜராத்
இன்றைய முக்கியச் செய்திகள்
* நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. அகில இந்திய அளவில் தமிழக மாணவன் முதலிடம் பெற்று சாதனை.
* தமிழக போக்குவரத்து துறைக்கு 600 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* நெக்ஸ்டு தேர்வு முறையை கைவிட வேண்டுமென்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
* எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று தொடக்கம்.
* சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்ந்த பூவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
* குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும் பெப்பர்-ஜாய் புயல் பெரும் சேதத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.
TODAY'S HEADLINES
* NEET results are out. Student from Tamil Nadu has achieved first place in all India level.
* It has been decided to purchase 600 new buses for the Tamil Nadu Transport Department.
* Chief Minister of Tamil Nadu has written a letter to the Prime Minister to abandon the NEXT exam system.
* Schools start today for LKG to V class students.
* NASA has shared a picture of a flower grown on the
International Space Station.
* Cyclone Pepper-Joy is likely to make landfall in Gujarat
tomorrow, the Meteorological Department has warned.
கருத்துகள்
கருத்துரையிடுக