பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.06.2023, வியாழன்

 15.06.2023, வியாழன்

திருக்குறள்

தாளாண்மை  இல்லாதான்  வேளாண்மை  பேடிகை

வாளாண்மை  போலக்  கெடும்.

பொருள்

முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி செய்வது பேடி கையிலுள்ள வாள் போல எந்தப் பயனுமில்லாமல் போகும்.

பழமொழி

Failure is the stepping stone for success

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

பொன்மொழி

அலைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நீ நீந்தக் கற்றுக்கொள்ளலாம்.

பொதுஅறிவு

உலகில் அதிக அளவில் யாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது?

லெனின் 

இன்றைய முக்கியச் செய்திகள்

* நள்ளிரவு 12 மணி வரை படித்ததால் இமாலய வெற்றி. அறுவை சிகிச்சை நிபுணர் ஆவது என் கனவு. - நீட் தேர்வில் முதலிடம் பெற்ற பிரபஞ்சன் பேட்டி.

* ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினம். பிரதமர் பங்கேற்கிறார்.

* பிபோர் ஜாய் புயல் எதிரொலி - பாகிஸ்தானில் 57 ஆயிரம் பேர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.

* உலகக் கோப்பை சுவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

TODAY'S HEADLINES

* Studying till 12 midnight, Himalayan success. My dream is to become a surgeon. - NEET topper Prapanhan interviewed.

* Yoga Day at the United Nations. Prime Minister participates.

* Bibor Joy storm reverberations - 57,000 people evacuated from their homes in Pakistan.

* India started the Suwash World Cup with a win.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்