பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.06.2023, வெள்ளி
16.06.2023, வெள்ளி
திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள்
பொருள் இல்லாதவரை எல்லோரும் இகழ்ந்து பேசுவர். பொருளுடையவரை எல்லாரும் போற்றுவார்கள்.
பழமொழி
A PENNY SAVED IS A PENNY GAINED
சிறுதுளி பெரு வெள்ளம்
பொன்மொழி
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார். அதை நீ வென்று விடலாம். - அப்துல்கலாம்.
பொதுஅறிவு
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான்
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
* மேட்டூர் அணையிலிருந்த டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது.
* பிபோர் ஜாய் புயல் கரையைக் கடந்தது. பாதிப்புகளை முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர்.
* பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடையே கருத்து இந்திய சட்ட ஆணையம்.
* தமிழகத்தில் நாளை முதல் வெயில் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
* இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
TODAY'S HEADLINES
* District level Tamil handwriting competition will be conducted and prizes will be given to school students by the Tamil Development Department.
* The water from Mettur dam which was released for delta irrigation reached Mukumkomu.
* Public Opinion on General Civil Law Law Commission of
India.
* Cyclone Pibor Joy has crossed the coast. The Prime Minister inquired about the effects from the Chief Minister.
* The Meteorological Department has predicted that the heat
wave is likely to decrease in Tamil Nadu from tomorrow.
* The Ashes Test cricket series between England and
Australia starts today.
கருத்துகள்
கருத்துரையிடுக