பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.06.2023, செவ்வாய்
20.06.2023, செவ்வாய்
திருக்குறள்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
பொருள்
அறிவில்லாதவர் அஞ்சக் கூடியதற்கு அஞ்சமாட்டார்கள். அறிவுடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள்.
பழமொழி
Look before you leap.
ஆழமறியாமல் காலைவிடாதே.
பொன்மொழி
வாழ்க்கையில் உயிருக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக்கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கைதான்.
பொதுஅறிவு
தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
தஞ்சாவூர்
இன்றைய முக்கியச் செய்திகள்
* 27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜீன் மாதத்தில் 3 மடங்கு அதிக மழை பெய்ததாக வானிலை மையம் தகவல்.
* மழையிலும் நடந்து +2 துணைத்தேர்வை 56 ஆயிரம் பேர எழுதினர்.
* தமிழ்நாட்டில் சாலை வரி உயருவதால் வாகனங்களின் விலையும் 5% உயரும்.
* ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்றார் பவானிதேவி.
Today's Headlines
* After 27 years, Chennai received 3 times more rain in the month of June, according to the Meteorological Department.
* 56 thousand people wrote the +2 sub-examination even in the rain.
* In Tamil Nadu, the price of vehicles will also increase by 5% due to the increase in road tax.
* Bhavanidevi won bronze in Asian Championship Fencing.
கருத்துகள்
கருத்துரையிடுக