பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 22.06.2023, வியாழன்
22.06.2023, வியாழன்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
பொருள்
ஒருவன் செய்யக் கூடாத செயலைச் செய்தால் கெடுவான்.
செய்யக் கூடிய செயலைச் செய்யாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி
No smoke without fire.
நெருப்பின்றி புகையாது.
பொன்மொழி
நாம் செய்ய வேண்டியது இதுதான். நமக்கு பொருத்தமுடையது என்று தெளிவாக தெரிந்து கொண்ட பின்னர் அந்த செயலை முழுமையாக விரும்பிச் செய்ய வேண்டும். - பெருஞ்சித்திரனார்.
பொதுஅறிவு
எவரெஸ்ட்டில் கால்வைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளிப் பெண் யார்?
அருணிமா சின்ஹா
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஐ.நா சபையில் இந்தியப் பிரதமர் தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
* தமிழகத்தில் 6 ஆயிரம் இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டம்.
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
* அரசுப் பள்ளிகளில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
* தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Today's Headlines
* A grand yoga program was held at the UN Assembly under the leadership of the Prime Minister of India.
* Plan to conduct medical consultation at 6000 places in Tamil Nadu.
* Class 10 general exam re-results will be released today.
* Director of School Education orders to conduct Tamilkudal
program in government schools three times a year
* The Meteorological Department has announced that rain is
likely for three more days in Tamil Nadu.
கருத்துகள்
கருத்துரையிடுக