பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.06.2023, வெள்ளி
23.06.2023, வெள்ளி
திருக்குறள்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
பொருள்
குற்றத்திலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறு பிறப்பிலும், இப்பிறப்பிலும் இன்பத்தைத் தரும்.
பழமொழி
Money makes many things
பணம் பத்தும் செய்யும்.
பொன்மொழி
இவ்வுலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும், மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். - சுவாமி விவேகானந்தர்.
பொதுஅறிவு
சர்வதேசக் காடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
இன்றைய முக்கியச் செய்திகள்
* இந்தியா முன்னேறும்போது அனைத்து உலக நாடுகளும் முன்னேறுகின்றன. அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் பேச்சு.
* இந்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம். ரேண்டம் எண் கணக்கீட்டின்போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சேர்க்கப்படாது.
* மாவட்டங்கள்தோறும் பசுமை மயானங்களை உருவாக்க ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.
* இந்த கல்வியாண்டில் 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வௌெியிட்டுள்ளது.
* சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்தது.
* கால்பந்து போட்டியில் புதிய சாதனை படைத்த ரொனால்டோவுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ்.
Today's Headlines
* When India is progressing, all countries of the world are progressing. Indian Prime Minister's speech in US Parliament.
* Change in admission rules for engineering courses from this academic year. Class 10 marks will not be included in random number calculation.
* Chief Secretary's letter to Collectors to create green cemeteries in every district.
* The Government of Tamil Nadu has issued an order allowing the appointment of 5699 Honorary Lecturers in this academic year.
* Thunderstorms occurred in Chennai and surrounding
districts.
* Guinness World Records certificate for Ronaldo who set a new
record in football
கருத்துகள்
கருத்துரையிடுக