பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 26.06.2023, திங்கள்


 26.06.2023, திங்கள்

திருக்குறள்

இடுக்கண்  படினும்  இளிவந்த  செய்யார்

நடுக்குஅற்ற  காட்சி  யவர்.

பொருள்

தெளிவான அறிவினை உடையவர்கள் துன்பம் அடைந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

பழமொழி

Blessed are the meek; For they shall inherit the earth

பொறுத்தார் பூமி ஆள்வார்.

பொன்மொழி

நிதானம் என்னும் அற்புதமான ஆயுதத்தைப் பயன்படுத்துபவர்கள் எதையும் சாதிப்பார்கள்.

பொதுஅறிவு

உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி எது?

குயின் அலெக்லான்ட்ரா பேர்ட்விங்.

இன்றைய முக்கியச்செய்திகள்

* பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

* பறவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில பறவை ஆணையம் அமைப்பு.

* 64 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென்மேற்கு மழை தொடங்கியது.

* வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.

Today's Headlines

* The counseling rank list for engineering courses will be released today.

* Tamil Nadu State Bird Authority is an organization on behalf of the government to ensure the protection of birds.

* After 64 years, Delhi and Mumbai received southwest monsoon on the same day.

* A low pressure area formed in the Bay of Bengal. The Meteorological Department has informed that there is a possibility of rain due to heat wave.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்