பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.06.2023, செவ்வாய்

 27.06.2023, செவ்வாய்

திருக்குறள்

பயன்மரம் உள்ளூர்ப்  பழுத்தற்றால்  செல்வம்

நயன்உடை  யான்கண்  படின்.

பொருள்

உதவி செய்யும் நல்ல குணமுடையவனிடம் உள்ள செல்வம் பழமரம் ஊரின் நடுவில் பழுத்தது போன்றதாகும்.

பழமொழி

The tongue of the idle person is never still

சோம்பேறியின் நாக்கு சும்மா இருக்காது.

பொன்மொழி

உழைப்பில் எறும்பாய் இரு.

உறுதியில் இரும்பாய் இரு.

வெற்றி கரும்பாய் வரும்.

பொதுஅறிவு

ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?

வோலடைல்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* பெண்களுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை.

* காலை சிற்றுண்டித் திட்டத்தில் உணவு வகைகள் மாற்றம். வாரத்தில் இரண்டு நாட்கள் தானிய வகைகளை வழங்கவும் ஏற்பாடு.

* பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 102 பேர் 200 க்கு 200 பெற்று சாதனை. திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம் பெற்றார்.

* மத்தியப்பிரதேச போபாலில் இன்று 5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

* இந்தியா - அமெரிக்கா நட்புறவு முன்பை விட வலுப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் கருத்து.


Today's Headlines

* Chief Minister advises on providing Rs 1000 entitlement to women.

* Change in food types in breakfast plan. Arrangements are also made to provide food grains two days a week.

* A record 102 people scored 200 out of 200 in the engineering rank list. Tiruchendur student Nethra won first place.

* Prime Minister will inaugurate 5 Vande Bharat trains today in Bhopal, Madhya Pradesh.

* India-US friendship is stronger than ever. President Joe Biden comments.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்