பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.07.2023, திங்கள்

 03.07.2023, திங்கள்

திருக்குறள்

உழுவார்  உலகத்தார்க்கு  ஆணிஅஃது  ஆற்றாது

எழுவாரை  எல்லாம்  பொறுத்து

பொருள்

உழவுத்தொழிலே மற்ற தொழில் செய்வார்க்கும் உணவினை வழங்குகின்றது. எனவே உழவுத்தொழில் செய்பவர் உலகத்தோருக்கு அச்சாணி போன்றவர்.

பழமொழி

After a storm there is calm.

புயலுக்குப் பின் அமைதி.

பொன்மொழி

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார். அதை நீ வென்றுவிடலாம். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

உலகிலேயே மிக உயரமான மலை எது?

இமயமலை.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. வடஅமெரிக்க தமிழர் மாநாட்டில் முதல்வர் பேச்சு.

* துவரம் பருப்பு விலை ஒரே ஆண்டில் 25 சதவீதம் உயர்வு.

* தக்காளி விலையைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத் அமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை.

* முதல்முறையாக புதுவை-சென்னைக்கு மின்சாரப் பேருந்து.

* தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குஜராத்தில் மிக பலத்த மழை பெய்தது.

* உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேயை வென்று இலங்கை அணி தகுதி பெற்றது.

Today's Headlines

* Government of Tamil Nadu encourages archaeological research. Chief Minister's speech at the North American Tamil Conference.

* 25 percent rise in duram dal price in a single year.

* Cooperative Minister consults with officials today to control tomato prices.

* Electric bus for the first time Puduwai-Chennai.

* Southwest Monsoon intensified. It rained heavily in Gujarat.

* Sri Lanka qualified by defeating Zimbabwe in the World Cup Qualifier cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்