பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.07.2023, புதன்
05.07.2023, புதன்
திருக்குறள்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
பொருள்
நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.
பழமொழி
Familiarity breeds contempt.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பொன்மொழி
கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. - மகாகவி பாரதியார்.
பொதுஅறிவு
உலகிலேயே மிகப்பெரிய வானியல் கடிகாரம் எங்கு உள்ளது?
இராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ளது.
இன்றைய முக்கியச் செய்திகள்
* சென்னை ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
* காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த ரூபாய் 404 கோடி ஒதுக்கீடு.
* ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - ஏழு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை.
* தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.
* தெற்காசிய கால்பந்து போட்டியில் குவைத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
Today's Headlines
* Tomato sales started in Chennai ration shops. It was sold at Rs 60 per kg.
* Allocation of Rs 404 crore for expansion of breakfast scheme.
*Shanghai Cooperation Conference - Prime Minister consults with seven heads of state.
* Chance of very heavy rain in two districts of Tamil Nadu. Meteorological Center information.
* India beat Kuwait to win the South Asian Football.
கருத்துகள்
கருத்துரையிடுக