பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.07.2023, வெள்ளி

 07.07.2023, வெள்ளி

திருக்குறள்

உழுவார்  உலகத்தார்க்கு  ஆணிஅஃது  ஆற்றாது

எழுவாரை  எல்லாம்  பொறுத்து

பொருள்

உழவுத்தொழிலே மற்ற தொழில் செய்வார்க்கும் உணவினை வழங்குகின்றது. எனவே உழவுத்தொழில் செய்பவர் உலகத்தோருக்கு அச்சாணி போன்றவர்.

பழமொழி

After a storm there is calm.

புயலுக்குப் பின் அமைதி.

பொன்மொழி

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார். அதை நீ வென்றுவிடலாம். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

உலகிலேயே மிக உயரமான மலை எது?

இமயமலை.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் - முதலமைச்சர் இன்று ஆலோசனை.

* சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் அக்டோபரில் முதல் இயங்கும்.- தெற்கு ரயில்வே அறிவிப்பு.

* சந்திராயன் - 3 விண்கலம் வரும் 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும். - இஸ்ரோ அறிவிப்பு.

* நெல்லை மற்றும் தென்காசியில் தொடர்மழை பெய்ததால் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்ந்தது.

ஆசியாவின் சிறந்த ஜீனியர் தடகள வீரராக செல்வபிரபு தேர்வு.

Today's Headlines

* Scheme to provide monthly stipend of Rs 1000 to women - Chief Minister advises today.

* Vande Bharat train between Chennai - Nellai will run from October.- Southern Railway Notification.

* Chandrayaan-3 spacecraft will be launched on the 14th. - ISRO announcement.

* Due to incessant rains in Nellai and Tenkasi, the water level of Servalar dam rose by 17 feet in a single day.

* Selva Prabhu selected as Asia's Best Junior Athlete.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்