பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.07.2023, புதன்

 12.07.2023, புதன்

திருக்குறள்

செய்தக்க  அல்ல  செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும்  கெடும்

பொருள்

ஒருவன் செய்யக் கூடாத செயலைச் செய்தால் கெடுவான்.

செய்யக் கூடிய செயலைச் செய்யாவிட்டாலும் கெடுவான்.

பழமொழி

No smoke without fire.

நெருப்பின்றி புகையாது.

பொன்மொழி

நாம் செய்ய வேண்டியது இதுதான். நமக்கு பொருத்தமுடையது என்று தெளிவாக தெரிந்து கொண்ட பின்னர் அந்த செயலை முழுமையாக விரும்பிச் செய்ய வேண்டும். - பெருஞ்சித்திரனார்.

பொதுஅறிவு

எவரெஸ்ட்டில் கால்வைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளிப் பெண் யார்?

அருணிமா சின்ஹா

இன்றைய முக்கியச் செய்திகள்

* இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து முன்னேறியதாக ஐ.நா. தகவல்.

* சந்திராயன் - 3 விண்கலம் ஏவுதல் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கியது. ஓரிரு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும்.

* மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பத்தாயிரம் கன அடியாக குறைப்பு.

* தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.

* மகளிர் கிரிக்கெட்: 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது இந்தியா.

Today's Headlines

* UN said that 41.5 crore people have moved out of poverty in India in the last 15 years. Information.

* Chandrayaan-3 spacecraft nearing final stage. The countdown will begin in a couple of days.

* Reduction of water release from Mettur dam to ten thousand cubic feet.

* Chief Minister consults with police officials about law and order in Tamil Nadu.

* Women's Cricket: India beat Bangladesh by 8 runs.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்