பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.07.2023, வியாழன்

 13.07.2023, வியாழன்

திருக்குறள்

தாளாண்மை  என்னும்  தகைமைக்கண்  தங்கிற்றே

வேளாண்மை  என்னும்  செருக்கு

பொருள்

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.

பழமொழி

A single swallow cannot make a summer

தனிமரம் தோப்பாகாது

பொன்மொழி

அனைவரையும் நேசி. சிலரை மட்டும் நம்பு. ஒருவரைப் பின்பற்று. ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள். - லெனின்.

பொதுஅறிவு

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?

ஜான் பென்னி குயிக்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களின் கை விரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

* மாமல்லபுரம் புராதன சின்னங்களை  மின்னொளியில் இரவு 9 மணி வரை பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

* 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. சென்னையில் மட்டும் 87 கடைகளில் தக்காளி விற்பனை.

* மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் 2030 க்குள் சாதித்துக் காட்ட சீனா தீவிரம்.

* 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்.

* தமிழ்நாடு பிரிமியர் லீக் கோப்பையை வென்றது கோவை அணி.

Today's Headlines

* The Tamil Nadu government has announced that the registration of fingerprints of women's rights beneficiaries is mandatory.

* Department of Archeology has announced that the ancient symbols of Mamallapuram can be viewed in electronic light till 9 pm.

* Sale of tomatoes started in 302 ration shops. Tomatoes are sold in 87 shops in Chennai alone.

* China is serious about sending people to the moon by 2030.

* Heavy rain warning for 8 districts - Information from Meteorological Department.

* Coimbatore won the Tamil Nadu Premier League trophy.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்