பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.07.2023, வெள்ளி
14.07.2023, வெள்ளி
திருக்குறள்
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
பொருள்
மனம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவதே சிறந்ததாகும்.
பழமொழி
Truth alone triumphs
வாய்மையே வெல்லும்.
பொன்மொழி
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். - லெனின்
பொதுஅறிவு
தென்னிந்தாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?
கோயம்புத்தூர்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பெற வரும் 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்.
* நகராட்சி, மாநகராட்சி தலைவர்களுக்கு ரூபாய் 10000 மதிப்பூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
* சந்திராயன் - 3 கவுண்டவுன் தொடங்கியது. இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
* ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரதமர் வலியுறுத்தல்.
* ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
Today's Headlines
* Special camp from 24th to receive application for women's stipend.
* Chief Minister's announcement that 10000 rupees will be given to the heads of municipalities and corporations.
* Chandrayaan - 3 countdown has started. It will be launched today at 2:35 PM.
* Prime Minister insisted on India becoming a permanent member of the UN Security Council.
* India has won three gold medals in the Asian Athletics Championships
கருத்துகள்
கருத்துரையிடுக