பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.07.2023, செவ்வாய்
18.07.2023, செவ்வாய்
திருக்குறள்
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
பொருள்
ஒரு செயலால் மற்றொரு செயலை முடித்துக் கொள்ள வேண்டும். அச்செயல் ஒரு யானையால் மற்றொரு யானையைக் கட்டியது போன்றதாகும்.
பழமொழி
A hasty man never wants woe
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு.
பொன்மொழி
பயம் அதன் மாயத்தை உருவாக்குகிறது. அது பயத்தைவிட மிகவும் பயமாக உள்ளது. - ஜவஹர்லால் நேரு.
பொதுஅறிவு
உலகின் மிகச்சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
இன்றைய முக்கியச் செய்திகள்
* செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஐ.நா சபையில் இன்று ஆலோசனைக் கூட்டம்.
* சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது.
* பார்ம்.டி. செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
* இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நடத்த வேளாண்மை பல்கலைக் கழகம் அறிவிப்பு.
* ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை - முதலிடத்தைத் தக்க வைத்தார் கார்லோஸ் அல்காரஸ்.
Today's Headlines
* Consultation meeting today in the UN Council regarding artificial intelligence.
* Orbit of Chandrayaan-3 spacecraft further raised.
* Pharm.D. Application registration for Diploma in Nursing has started.
* Agriculture University notification to conduct counseling by the end of this month.
* ATP Tennis Rankings - Carlos Algarz retains top spot.
கருத்துகள்
கருத்துரையிடுக