பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.07.2023, புதன்
19.07.2023, புதன்
திருக்குறள்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
பொருள்
நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.
பழமொழி
Familiarity breeds contempt.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பொன்மொழி
உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.
பொதுஅறிவு
சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?
கோபர் நிக்கஸ்
இன்றைய முக்கியச் செய்திகள்
*இலங்கை அதிபர் ரணில் விக்ரசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை.
* மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும்.
* இன்று நடைபெறும் எஸ் எம் சி கூட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதாத மாணவர்கள் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
* அமெரிக்காவில் தன்னுடைய மாணவனுக்கு கிட்னியை தானம் செய்தார் ஆசிரியர்.
* இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியுடன் இன்று மோதுகிறது இந்திய மகளிர் அணி.
கருத்துகள்
கருத்துரையிடுக