பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் -20.07.2023, வியாழன்
20.07.2023, வியாழன்
திருக்குறள்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
பழமொழி
Single tree makes no forest
தனிமரம் தோப்பாகாது.
பொன்மொழி
சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை. - வின்ஸ்டன் சர்ச்சில்.
பொதுஅறிவு
இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமானி யார்?
அவனி சதுர்வேதி
இன்றைய முக்கியச் செய்திகள்
* மருத்துவ சீட் எடுத்து கல்லூரியில் சேராவிட்டால் ஓர் ஆண்டு நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு தடை விதிக்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை.
* பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்.
* முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
* மகாராஷ்டிராவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை.
* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு. செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதல்.
Today's Headlines
* One year barred from writing NEET if you don't get medical card.
* Application for monthly allowance of Rs.1000 for women will be distributed from today.
* The Tamil Nadu Cabinet will meet on the 22nd under the chairmanship of the Chief Minister.
* Continued rain in Maharashtra. Yellow alert for Mumbai.
* Cricket - Asia Cup Schedule Release. India Pakistan Clash on 2nd September.
கருத்துகள்
கருத்துரையிடுக