பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.07.2023, வெள்ளி
21.07.2023, வெள்ளி
திருக்குறள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
பொருள்
அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.
பழமொழி
Every tide has its ebb
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
பொன்மொழி
நல்ல தொடக்கம் பாதி வேலை முடிந்ததற்குச் சமம். - ஹோரஸ்.
பொதுஅறிவு
இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
எம்.பாத்திமா பீவி
இன்றைய முக்கியச் செய்திகள்
* பிரிட்டன் சர்வதேச மாணவர் விருது இறுதிப் போட்டியில் திருவண்ணாமலை மாணவி வினிஷா.
* இங்கிலாந்து பத்திரிக்கைத் துறையிலும் கால் பதிக்கிறது செயற்கை நுண்ணறிவு. - கூகுள் நிறுவனம் பரிசோதனை.
* சந்திராயன் -3 விண்கலத்தின் சுற்றுப்பாதை நான்காவது கட்டமாக உயர்த்தப்பட்டது.
* ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரயில்களை விரைவில் இயக்க இந்திய ரயில்வே முடிவு.
* ஆடி மாத காற்று சீசன் தொடங்கியது. தமிழக காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு.
* ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. பல நாடுகளில் வேலை நிறுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது.
Today's Headlines
* Thiruvannamalai student Vinisha in the finals of the British International Student Award.
* Artificial intelligence is also gaining a foothold in the UK press industry. - Google Company Experiment.
* Chandrayaan-3 spacecraft's orbit has been raised to the fourth stage.
* Indian Railways has decided to run special trains at low fares for the poor and middle class soon.
*
Adi month wind season has started. Increase in power generation in wind farms
in Tamil Nadu.
*
European countries are sweltering in heat. Many countries are at risk of a
strike.
கருத்துகள்
கருத்துரையிடுக