பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 25.07.2023, செவ்வாய்
25.07.2023, செவ்வாய்
திருக்குறள்
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லா தாறு
பொருள்
கற்றவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் சொந்தமாகும்போது ஒரு சிலர் சாகும்வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன்?
பழமொழி
Sadness and gladness succeed each other.
பள்ளம் என்று ஒன்று இருந்தால் மேடு என்று ஒன்று இருக்கும்.
பொன்மொழி
முயற்சிதான் அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. முயற்சி இல்லையென்றால் எந்தக் காரியமும் நிறைவடையாது. - திருவள்ளுவர்.
பொதுஅறிவு
இந்திய தேசிய இராணுவ தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி 15.
இன்றைய முக்கியச் செய்திகள்
* அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படும் என முதலமைச்சர் பேச்சு.
* 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 ராக்கெட் வரும் 30ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.
* மகளிர் உரிமைத்தொகை பெற சென்னையில் 1,500 சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு.
* அடுத்த மாதம் சென்னைக்கு வருகிறார் ஜனாதிபதி.
* டுவிட்டரின் புதிய லோகோ X என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
* தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
Today's Headlines
* Chief Minister's speech that breakfast program will be extended to all schools.
* P S L V C - 56 Rocket with 7 satellites will launch on 30th July.
* Name registration through Bio-metric in 1,500 special camps in Chennai to get women's rights.
* The President wills coming to Chennai next month.
* Official announcement of Elon Musk as Twitter's new logo is X.
* Heavy rain is likely in 5 districts of Tamil Nadu,
Meteorological Center informs.
கருத்துகள்
கருத்துரையிடுக