பள்ளி- காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 26.07.2023, புதன்
26.07.2023, புதன்
திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பொருள்
எந்தப் பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைப் பொருளை அறிவதே அறிவாகும்.
பழமொழி
Justice stays long, but strikes at leis.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
பொன்மொழி
பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது காலம் சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.
பொதுஅறிவு
மதுரை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
என்.எம்.ஆர் சுப்பாராமன்
இன்றைய முக்கியச் செய்திகள்
* இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்.
* மணற்கேணி எனும் புதிய கற்றல் செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக சென்றது சந்திரயான் விண்கலம்.
* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால் காவிரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
* மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
* இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
Today's Headlines
* S S L C supplementary exam results will be released today.
* A new learning app called Manarkeni has been introduced in the school education department.
* Chandrayaan spacecraft successfully entered the fifth orbit.
* Cauvery water has been released due to continuous heavy rains in the Cauvery catchment areas.
*
India is the world leader in motorcycle usage.
*
The 2nd Test between India and West Indies ended in a draw.
கருத்துகள்
கருத்துரையிடுக