பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.07.2023, வியாழன்
27.07.2023, வியாழன்
திருக்குறள்
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
பொருள்
துன்பங்களுக்குள் மிகுந்த துன்பம் தருவது ஆசை. அதனை விட்டால் இவ்வுலகினும் இன்பமானது இடைவிடாமல் வந்தடையும்.
பழமொழி
A bad work man blames his tools.
ஆடத் தெரியாதவர் தெரு கோணல் என்றாராம்.
பொன்மொழி
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை.
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.
- அப்துல்கலாம்.
பொதுஅறிவு
உலகிலேயே மிக நீளமான அணை எது?
ஹீராகுட் அணை
இன்றைய முக்கியச் செய்திகள்
* ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவை நோக்கி பயணிக்கிறது சந்திரயான் - 3
* திருவண்ணாமலையில் ஆகஸ்ட் மாதம் முதல் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு இலவச தரிசனம்.
* கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது.
* முதியோர் உதவித்தொகை உயர்வு. தமிழக அரசு அரசாணை வெளியீடு.
* ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார் பி.வி.சிந்து.
Today's Headlines
* Chandrayaan-3 will travel towards the moon on August 1.
கருத்துகள்
கருத்துரையிடுக