பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.07.2023, திங்கள்
31.07.2023, திங்கள்
திருக்குறள்
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
பொருள்
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
பழமொழி
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
பொன்மொழி
கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்.
பொதுஅறிவு
இந்திய நாட்டில் உள்ள உயர்நீதி மன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
25
இன்றைய முக்கியச் செய்திகள்
* சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
* செப்டம்பர் மாதம் முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடக்கம்.
* ஏழு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 56 ராக்கெட்.
* இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
* The Prime Minister has requested everyone to hoist the national flag at home on Independence Day.
* The minister said that the vacancies in the medical department will be filled soon.
* Resumption of flight service from Salem from September.
* PSLV launched with seven satellites. C56 rocket.
கருத்துகள்
கருத்துரையிடுக