பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.08.2023, செவ்வாய்
1.08.2023, செவ்வாய்
திருக்குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
பொருள்
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
பழமொழி
Good swimmers are sometimes drowned
யானைக்கும் அடி சறுக்கும்.
பொன்மொழி
வெற்றி என்பது எட்டிவிடும் தூரத்தில் இல்லை.
நானும் அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை.
பொதுஅறிவு
தேவபூமி என்றழைக்கப்படும் மாநிலம் எது?
உத்தரகண்ட்
இன்றைய முக்கியச் செய்திகள்
* புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது சந்திரயான் - 3.
* கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்.
* கன்னியாகுமாரி மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்.
* புதுச்சேரியில் நோ பேக் டே கொண்டாட்டம். பள்ளிக்கு புத்தகப் பை இல்லாமல் மாணவர்கள் வந்தார்கள்.
* அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமனம்.
Today's Headlines
* Chandrayaan-3 completes orbit around Earth.
* Chief Minister provided welfare assistance in Kolathur.
* Geographical Code recognition for 3 items including Kanyakumari clam banana.
* No Bag Day celebration in Puducherry. Students came to school without book bags.
* Bumrah appointed as captain of Indian team for T20 cricket series against
Ireland.
கருத்துகள்
கருத்துரையிடுக