பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.09.2023, வெள்ளி

 01.09.2023, வெள்ளி

திருக்குறள்

தகுதி  எனஒன்று நன்றே  பகுதியான்

பாற்பட்டு  ஒழுகப்  பெறின்

பொருள்

யாவரிடத்தும், எவ்வகையிலும் நீதி முறையை விடாமல் பின்பற்றி நடக்க முடியுமாயின் நடுவுநிலைமை என்ற ஒன்றே சிறந்த அறமாகும்.

பழமொழி

Distance lends Enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

பொன்மொழி

உடலை அடக்கி, நாக்கை அடக்கி, மனதையும் அடக்கும் அறிவாளிதான் உண்மையான அடக்கம் உடையவன். - புத்தர்.

பொதுஅறிவு

சூரியன் தோன்றி எத்தனை வருடங்கள் ஆகின்றன?

460 கோடி வருடங்கள்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* தமிழகத்தில் செயல்படும் காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானா அதிகாரிகள் பார்வையிட்டனர்.

* செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை. தமிழக அரசு அரசாணை வெளியீடு.

* செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு.

* விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* உலக செஸ் போட்டியில் 2 ஆம் பிடித்த பிரக்ஞானந்தாவை இல்லத்திற்கு வரவழைத்துப் பாராட்டினார் பிரதமர் மோடி.

Today's Headlines

* Applying for B.Ed first year admission in Government and Government Aided Colleges in Tamil Nadu from today till 11th September.

* Telangana officials visited the breakfast program in Tamil Nadu.

* 18th September is Vinayagar Chaturthi holiday. Government of Tamil Nadu Ordinance Release.

* Central Government announcement that a special session of Parliament will be held in September.

* The Meteorological Department has announced that 4 districts viz Villupuram, Thiruvannamalai, Kallakurichi and Perambalur will receive heavy rain.

* Prime Minister Modi invited Pragnananda, the 2nd favorite in the world chess tournament, to his home.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்