பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.08.2023, புதன்

 02.08.2023, புதன்

திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

பொருள்

மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

பழமொழி

Great engines turn on small pivots

அச்சில்லாமல் தேர் ஓடுமா?

பொன்மொழி

நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச் செய்கின்றன. - ஒரிசன் மார்டென்.

பொதுஅறிவு

இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?

சரோஜினி நாயுடு

இன்றைய முக்கியச் செய்திகள்

► 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மூலம் இளநிலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.

 200 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை.

► வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் குறைப்பு.

 தமிழகம் கர்நாடகம் இடையே மெட்ரோ இரயில் இயக்க திட்டம்.

► தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.

Today's Headlines

Government announcement that 11th class students will be given scholarships up to junior graduation through Tamil Nadu Chief Minister Aptitude Test.

200 ration shops sell tomatoes at Rs 60 per kg.

Reduction in cylinder price by Rs.92 for commercial use.

Metro rail project between Tamil Nadu and Karnataka.

Chennai Meteorological Department informs that there is a possibility of moderate rain in Tamil Nadu and Puducherry.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்