பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.08.2023, திங்கள்
07.08.2023, திங்கள்
திருக்குறள்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
பழமொழி
Single tree makes no forest
தனிமரம் தோப்பாகாது.
பொன்மொழி
சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை. - வின்ஸ்டன் சர்ச்சில்.
பொதுஅறிவு
இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமானி யார்?
அவனி சதுர்வேதி
இன்றைய முக்கியச் செய்திகள்
* சந்திராயன் - 3 எடுத்த நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
* ஆளுநர் மாளிகையில் பாரதியார் மண்டபத்தைத் திறந்து வைத்தார் ஜனாதிபதி.
* இந்தியாவில் 508 ரயில் நிலையங்கள் ரூபாய் 25 ஆயிரம் கோடியில் நவீன மையம்.
* ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியா வருகை.
* மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் என சென்னைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி அறிவுரை.
* ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கியில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* ISRO released the first video of the moon taken by Chandrayaan-3.
* The President inaugurated the Bharatiyar Mandapam at the Governor's House.
* 508 railway stations in India at a cost of Rs 25 thousand crores modern hub.
* US President Joe Biden will visit India on September 7 to participate in the G-20 summit.
* President advises students not to get stressed at Madras University convocation ceremony.
* India beat Malaysia 5-0 in Asian Champions Cup Hockey.
கருத்துகள்
கருத்துரையிடுக