பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.08.2023, வியாழன்
10.08.2023, வியாழன்
திருக்குறள்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்புன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
பொருள்
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
பழமொழி
He who lives by the sword, dies by the sword
வாளால் வாழ்பவன் வாளாலே வீழ்வான்
பொன்மொழி
முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல. நீ நினைத்ததை முடிக்கும் வரை.
பொதுஅறிவு
2022 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர் யார்?
எழுத்தாளர் சிவசங்கரி
இன்றைய முக்கியச் செய்திகள்
* அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
* பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
* கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வுத் தேர்வுக்கு அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் ஆகஸ்ட் 18 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* இமாச்சலில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.
* ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* The government has announced that sugar pongal will be given to government school students on August 14.
* Second round of counseling for engineering courses has started.
* Government School Plus 1 students should apply for merit test for scholarship by August 18.
* Moderate earthquake measuring 3.4 magnitude in Himachal.
* India defeated Pakistan 4-0 in the Asian Champions Cup
hockey match.
கருத்துகள்
கருத்துரையிடுக