பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.08.2023, திங்கள்

 14.08.2023, திங்கள்

திருக்குறள்

தன்னுயிர்  நீப்பினும்  செய்யற்க  தான்பிறிது

இன்னுயிர்  நீக்கும்  வினை.

பொருள்

தனது உயிரே போவதானாலும் பிறவற்றின் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

பழமொழி

Bare words buy no barley.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

பொன்மொழி

உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது. ஆனால் உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்.

பொதுஅறிவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த விளங்கிட தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

சிற்பி

இன்றைய முக்கியச் செய்திகள்

* நாளை 76 வது இந்திய சுதந்திர தினவிழா - டெல்லி செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு.

* குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக முதல்வர் அறிக்கை.

* ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு ரூபாய் 1.10 கோடி பரிசு வழங்கியது.

* சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிக கனத்த மழை பெய்தது.

* இந்திய அணிக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

Today's Headlines

* India's 76th Independence Day tomorrow - High security at Delhi's Red Fort.

* Chief Minister's statement that the program to ensure nutrition for children has been a great success.

* Government of Tamil Nadu awarded Rs 1.10 crore prize to the Indian team which won the championship title in the hockey tournament.

* Very heavy rain fell in Chennai and its surrounding areas.

* The West Indies won the last T20 cricket match against the Indian team and won the series.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்