பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.08.2023, புதன்
16.08.2023, புதன்
திருக்குறள்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்
பொருள்
குற்றத்திலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறு பிறப்பிலும், இப்பிறப்பிலும் இன்பத்தைத் தரும்.
பழமொழி
Money makes many things
பணம் பத்தும் செய்யும்.
பொன்மொழி
இவ்வுலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும், மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். - சுவாமி விவேகானந்தர்.
பொதுஅறிவு
சர்வதேசக் காடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
மார்ச் 21
இன்றைய முக்கியச் செய்திகள்
* சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றினார். தியாகிகள் ஓய்வூதியம் ரூபாய் 11,000 ஆக அதிகரிப்பு.
* காலைச் சிற்றுண்டி அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் தகவல்.
* தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 21 சதவீதம் வரி வருவாய் உயர்ந்துள்ளது.
* 55,000 அரசுப் பணிகள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக முதலமைச்சர் தகவல்.
* மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
Today's Headlines
* The Chief Minister of Tamil Nadu hoisted the national flag at Chennai Fort. Martyrs pension increased to Rs 11,000.
* Chief Minister informs that breakfast will be extended to all schools.
* Tax revenue has increased by 21 percent this year compared to last year in Tamil Nadu.
* Tamil Nadu Chief Minister informed that 55,000 government jobs will be filled soon.
* Spain beat Sweden to reach Women's World Cup final.
கருத்துகள்
கருத்துரையிடுக