பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.08.2023, வியாழன்

 17.08.2023, வியாழன்

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

தக்காளித் திருவிழா நடைபெறும் நாடு எது?

ஸ்பெயின்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* பி.எஸ்.சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

* ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

* 23 ஆம் தேதி நிலவில் தரையிரங்கும் சந்திராயன் - 3 சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டது.

* முக்கிய சுற்றுலாத் தலங்களில் மதி அங்காடிகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

* டிஜிட்டல் இந்தியா விரிவாக்கத்திற்கு ரூபாய் 14,903 கோடி ஒதுக்கீடு.

* பெண்கள் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

Today's Headlines

* Online counseling for 19 types of paramedical courses including BSc Nursing, B Pharm started yesterday.

* From 18th August get original marks certificate of 10th class.

* Moon landing Chandrayaan-3 orbit on 23rd further reduced.

* Chief Minister announced that Mathi shops will be set up at major tourist spots.

* Allocation of Rs 14,903 crore for expansion of Digital India.

* England advance to Women's World Cup soccer final.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்